Saturday, October 28, 2017

இலங்கையில் அறிமுகமான புதிய இலத்திரனியல் அடையாள அட்டையிலுள்ள சிறப்பம்சங்கள்



இலங்கையில் 43 வருடங்களின் பின்னர் இலத்திரனியல் அடையாள அட்டை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்திலான புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய 12 இலக்கங்களை கொண்ட இந்த தேசிய அடையாள அட்டைக்கு சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்திலான புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் Barcode முறைகள் இந்த அடையாள அட்டைக்கு பொருத்தப்பட்டுள்ளது.

நபர்கள் தொடர்பான பயோமெற்றிக் உயிரியியல் விபரங்கள் அடையாள அட்டையில் சேர்க்கப்பட்டிருக்கும்.

பெயர், பிறப்பிடம், விலாசம், பால் ஆகிய தகவல்கள் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. அடையாள அடை உரிமையாளர்களின் கையொப்பம் உள்ளடக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஸ்மார்ட் அடையாள அட்டை சர்வதேசம் ஏற்றுக் கொண்ட அடையாள அட்டை தரத்தை கொண்டுள்ளது.

மேலும் அதன் ஊடாக மிகவும் இலகுவாகவும், வசதியாகவும் தங்களை சேவையை நிறைவேற்றி கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

தற்போது பயன்படுத்தும் அடையாள அட்டை நல்ல நிலையில் இருந்தால் புதிய அடையாள அட்டையை பெறும் அவசியம் இல்லை என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.